Web Published by Kaarthik. Powered by Blogger.

லவ் பண்ணுற பொண்ணுங்களை கழட்டி விடுவது எப்படி?

Saturday, March 12, 2011

இந்தப் பதிவை பெண் சகோதரிகள் ( சகோதரிகள் என்றாலே பெண்கள் தானே! அப்புறம் என்ன பெண் சகோதரிகள்? ) யாருமே படிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! காரணம் இது ஆண்கள் சமாச்சாரம்! இன்று ஆண்களுக்கு இருக்க கூடிய ஒரு முக்கிய பிரச்னைக்கு சில ஐடியாக்கள் கொடுக்கப் போகிறேன்! எனவே ஆல் கேர்ள்ஸ் ஓன் ஸ்டெப் பேக்! ஆண்களே வாருங்கள் நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்குவோம்!!

நண்பர்ஸ், நாம எல்லாம் ஆண்களாகப் பொறந்து எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறோம் தெரியுமா? அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்! முன்பெல்லாம் நமக்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்திச்சு, அதாவது நாம ஆசைப்பட்ட பொண்ணை எப்படி லவ் பண்ணி, கல்யாணம் பண்ணுறதுன்னு?

பொண்ணுங்க சைக்காலஜி தெரியாம, அவிங்க பின்னால சுத்தி, லவ் பண்ணி, டயத்தை வேஸ்டு பண்ணி, தாடி வளர்த்து, மண்டை வளர்த்து, மண்டை மேல ஒரு கொண்டை வளர்த்துக்கொண்டு திரிந்தோம்! அதெல்லாம் தேவதாஸ் காலம்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பொண்ணுங்க சைக்காலஜிய புரிஞ்சுகிட்டு, அவங்களுக்கு நூலு விட்டோம்!

இப்பவெல்லாம் பையங்க ரொம்ப வெவரமா இருக்காங்க! ஒரு பொண்ணை நாம லவ் பண்ணனுமுன்னா, அது ரொம்ப சிம்பிள்! பொண்ணுங்க சைக்காலஜிய அப்படியே தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஈசியா மடக்கிடுறோம்! ஆக இப்பவெல்லாம் யாருமே தாடி வச்சுக்கிட்டு அலையிறதில்லை!

ஆனா பாருங்க இப்பதான் நமக்கு ஒரு புது பிரச்சனை கெளம்பி இருக்கு! இது கடவுளால ஆண்களுக்கு தரப்பட்ட முக்கிய பிரச்சனை! அதாவது நாம ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சதும், அவளை விட ரொம்ப அழகான பொண்ணுங்க எல்லாம் நம்ம கண்ணு முன்னாடி வந்து போவாங்க! நமக்கோ செம கடுப்பாகும்! இவ்வளவு நாளும் ஏங்க போய்த் தொலைஞ்சீங்க? ன்னு அவங்கள மனசுக்குள்ள திட்டுவோம்!

அப்புறம் லவ் பண்ணிக்கிட்டு இருக்கிற பொண்ணை, கழட்டி விட முடியாம, வேற வழியில்லாம லவ் பண்ணிட்டு இருப்போம்! அது அப்படியே கல்யாணம் வரைக்கும் வந்துடுச்சுன்னா நம்ம வாழ்க்கையே வேஸ்டான மாதிரி ஒரு பீலிங்கு நமக்கு வரும்! இதெல்லாம் ஆம்பளைங்களுக்கு மட்டுமே கடவுளால கொடுக்கப்பட்ட தண்டனை!

என்ன நண்பர்ஸ்! நெஞ்சில கைவைச்சு சொல்லுங்க? நான் சொல்றது உண்மையா இல்லையா? அதனால நாம லவ் பண்ற பொண்ணை கழட்டி விடுறதுக்கு சில சூப்பர் ஐடியாக்கள் தர்றேன்! கப்புன்னு புடிச்சுக்குங்க!!

சிலபேர் ரொம்ப அவசரப்பட்டு, " இதோ பார் சாந்தி எனக்கு வீட்டில வேற பொண்ணு பாத்திருக்காங்க, அதனால என்னை மறந்துடு " ம்பாங்க! இப்பிடி சட்டு புட்டுன்னு சொன்னா எந்தப் பொண்ணுதான் தாங்கிக்குவா? பொறுமை நண்பா பொறுமை!!
மொதல்ல வாழ்க்கை வெறுத்த மாதிரி பேசணும்! " என்ன வாழ்க்கை? என்ன கல்யாணம், எல்லாமே சுத்த வேஸ்டு! " இந்த மாதிரி கொஞ்ச நாளைக்கு பேசிக்கிட்டு இருக்கணும்!
" என்னோட ஒண்ணா படிச்ச ரவி, நேத்திக்கு திடீருன்னு ஹாட் அட்டாக்குல செத்துட்டான்! இப்பவெல்லாம் யாருக்கு என்ன வருத்தம், எப்ப வருதுன்னே தெரியல" அப்டீன்னு அப்பப்ப சொல்லணும்! நோய் உள்ளவனை யார்தான் விரும்புவா? ஸோ உங்க லைன் கிளியராகிடும்!!
" அவ்வையார் என்கிற பேர்ல ஏழு பேர் இருந்தாங்களாம்! ச்சே யாரை நம்புறதுன்னே தெரியல " அப்டீன்னு சொல்லுங்க! அவ்வையார் பேர்ல பொண்ணுங்களுக்கு வெறுப்பு வந்துட்டுதுன்னா, அப்புறம் " ஒருவனுக்கு ஒருத்தி " ன்ன கோட்பாட்டையே மறந்துடுவாங்க!!
" என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ என்ன சுகத்தை அனுபவிக்கப் போறே? " ன்னு அடிக்கடி சொல்லணும்!
" என்னோட ஒண்ணாப் படிச்ச சேகர் பெங்களூருல இஞ்சினியரா இருக்கான்! அவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம்! பொண்ணு சாதாரண இடம்தான்! நான் கண்டிப்பா போயே ஆகணும் " னு சும்மா அள்ளி விடுங்க! சாதாரண பொண்ணுக்கு இஞ்சினியர் மாப்பிள்ளையா? நாம போயும் போயும் இவனை லவ் பண்ணித் தொலைச்சோமே அப்டீன்னு பொண்ணு நெனைச்சு உன்னை மறந்துடுவா!
" எனக்கு இந்தப் பத்து லட்சம் ரூபா கடன் மட்டும் இல்லைன்னா, எவ்வளவு ஜாலியாக இருப்பேன் தெரியுமா? அப்டீன்னு சொல்லுங்க! கடன்காரனைக் கட்டிக்கிட்டு எதுக்கு அழுவணும் னு பொண்ணு எஸ்கேப்!!
" ச்சே அக்கா கல்யாணம் பண்ணி ஆறு வருஷமாச்சு! இன்னும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துறாங்க" அப்டீன்னு சொன்னீங்கன்னா, இதே கொடுமையை தானும் அனுபவிக்க வேண்டி வரும் னு நெனைச்சு உங்க லவ்வர் எஸ்கேப்!
" கவிதைன்னா எனக்கு உசிரு! பாரதியார், பாரதி தாசன் கவிதைகளை இரவு இரவா கண்முழிச்சு விடியும் வரை படிப்பேன்' னு சொல்லுங்க அவ்வளவுதான் உங்க லவ் புட்டுகிக்கும்!
இவ்வளவு சொல்லியும் உங்க லவ்வர் உங்களை விட்டு பிரியமாட்டேன் அப்டீன்னு சொன்னா இறுதியா ஒரு பெரிய மேட்டர் இருக்கு! அதை யூஸ் பண்ணுங்க - அதாவது " இன்னிக்கு காலையில பக்கத்து வீட்டுக்காரங்க சண்டைக்கு வந்துட்டாங்க ஏன் தெரியுமா? நேத்து ராவு நான் விட்ட கொறட்டை சத்தத்துல அவங்களுக்கு தூக்கமே வரலியாம் " அப்டீன்னு சொல்லிட்டு திரும்பி பாருங்க, உங்க லவ்வர் அரை கிலோமீற்றருக்கு அங்கிட்டு போய்ட்டு இருப்பாங்க!
இவ்வளவு சொல்லியும் கேக்காம " உன்னைத்தான் நான் லவ் பண்றேன் நீ இல்லன்னா செத்துடுவேன் " அப்டீன்னு ஒரு பொண்ணு சொல்லிச்சுன்னா, நண்பா அவதாண்டா உனக்கு ஏத்த பொண்ணு! பேசாமல் மனசை அலையவிடாமல் அவளையே கல்யாணம் பண்ணிக்க, வாழ்க்கை சிறப்பா இருக்கும்!

ஹி....... ஹி..... என்னதான் காமெடி எழுதினாலும் கடைசியில முடிக்கும்போது சீரியஸாக, செண்டிமெண்டாக எழுத வேண்டுமாம்! அப்பதானாம் பலபேருக்கு நம்ம பதிவு தெரியவருமாம்!
என்ன கொடுமை சரவணா?

Read more...

About This Blog

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதோ சில டிப்ஸ்!





எற்கனவே தம்பத்தியத்தின் பல டிப்ஸ் தந்துள்ளேன்.. இதோ மேலும் ஒரு டிப்ஸ்..



மானதாகும்.கணவன்,மனைவிக்குள் சின்ன சின்ன சந்தோஷங்கள் இருந்தாலே வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.



திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!



அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ.........



கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.



அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.



இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.



அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!



எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக` பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர்.



அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.



1. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்` அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.

2. கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்` அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.



3. ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.



4. மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.



5. இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.



6. மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.



- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.



இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.



சரி.சரி.கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பிங்கப்பா....




நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: j.k.vaalu24.malliga@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP