Web Published by Kaarthik. Powered by Blogger.

அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்_டாக்டர்.கே.தனபாலன்

Friday, September 17, 2010

அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்
டாக்டர்.கே.தனபாலன்

 

"செக்ஸ்" என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. "சிக்மண்ட்பிராய்டு" என்று உளவியல் நிபுணர் "மனிதன் உயிர்வாழ்வதற்கு" உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார். மேலும் "மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய வில்லையென்றால் பல மனநோய்களுக்கும் தன்நிலையிழந்து செயல்பட்டு ஏற்படும் சமூக விரோத செயல்களுக்கும் ஆளாகிறான்" என கூறுகிறார்.

"
செக்ஸ்" அவசியத்தை வலியுறுத்தி தான், நமது முன்னோர்களும் அதனை நாம் வணங்கும் கோயில்களில் சிற்பங்களாக செதுக்கியுள்ளனர். மேலும் புனிதமான "காமசூத்திரம்" என இயற்கையான முறைப்படுத்தப்பட்ட செக்ஸ் வழிமுறை களையும் கூறக்கூடிய நூலையும் எழுதியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் எது நியாயமான செக்ஸ் உணர்வு? எது செக்ஸ் பிரச்சினை? என்பதில் படித்தவர்களுக்கும், பெரிய மேதைகளுக்கும் கூட தெளிவற்ற மனநிலை உள்ளது. செக்ûஸ பற்றிய தவறான புத்தகங்கள், இளைஞர்களை தவறானப் பாதையில் திசை திருப்புகின்றன. சில அறிஞர்கள் தரும் கேள்வி பதில்களும் மன குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஜான் புரூக்ஷன் என்ற அறிவியல் அறிஞர் செக்ஸ் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது "ஒரு ஆண் தனது உள்ளத்தாலும் உடலாலும் பெண்ணை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து, தனது ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறையாமல் (சராசரி 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை) உடலுறவில் ஈடுபட்டு, ஆணும் பெண்ணும் உச்சகட்ட திருப்தி நிலையடைந்து (சராசரியாக 20 முதல் 30 நிமிடம்) அமைதி பெறுவது". இவருடைய கூற்றே பல மனோதத்துவ அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும்.

இனிமேல் செக்ஸில் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும், அதற்கு உண்டான, தீர்வான ஹோமியோ மருந்துகளை பற்றியும் காண்போம். பொதுவாக செக்ஸ் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உண்டாவதற்கான காரணிகளை வைத்து இருபெரும் பிரிவாக மருத்துவ உலகம் பிரித்துள்ளது.

1.
மனரீதியிலான பாதிப்புகள் :

அதாவது, பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் திருப்பதியின்மையினாலும் கூட பின்னர் மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

2.
உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறைபாடுகளை உண்டாக்குகின்றன.

இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள்.

3.
சர்க்கரை வியாதி

சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது. இந்தக் காரணிகளால் இருபாலருக்கும் செக்ஸில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்வோம்.

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் :

செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு ஒன்றுதான் ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.

1. Erection disorder (
ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைபாடு)

பொதுவாக செக்ஸில் ஈடுபடும் பொழுது ஆணின் பிறப்புறுப்பிற்கு சராசரியாக 5 முதல் 10 நிமிடமும், பெண்ணு றுப்பில் நுழைந்தவுடன் "3 முதல் 5 நிமிடமும்" விறைப்புத்தன்மை அவசியம். இதில், விறைப்புத்தன்மை மிக எளிதில் குறைந்து ஆணுறுப்பு துவண்டு விட்டால் அது குறைபாடு மேலும் சிலருக்கு விறைப்பு தன்மையே சில நோய்களில் இருக்காது. (உ.ம்.) சர்க்கரை, சிறுநீரக செயலிழப்பு.

2. Ejaculation Premature (
விந்து விரைவாக வெளிப்படுதல்) :

பொதுவாக விந்து வெளியேற 3 முதல் 5 நிமிடம் ஆக வேண்டும். அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறப்பினுள் நுழையுமுன் விந்து வெளியேறினால் அது செக்ஸில் குறைபாடுதான்.நமது கிராம மக்கள் இதனை "நரம்புத்தளர்ச்சி" என்று அவர்களுக்கே உரிய பாணியில் கூறிவருகின்றனர். இது 70 % ஆண்களை பாதித்துள்ளது.

3. Inhibited Orgasam (
செக்ஸ் உணர்வு குறைபாடு) :

உன்னத நிலை உணர்வற்றுயிருத்தல் செக்ஸ் நிலையில் இருக்கும் பொழுது இது ஆணுக்கு பெண்பிறப்புறுப்பினுள் நுழைந்தவுடன் விந்தணு வெளிப்படும்பொழுது ஏற்படும் செக்ஸ் உன்னத நிலை உணர்ச்சியற்றுயிருத்தல் அல்லது உணர்வுயிருந்தும் விந்து சரியாக வெளிப்படாதிருத்தல்.

4. Priapism (
ஆணுறுப்பு விறைப்பில் தாங்கமுடியாத வலி) :

இந்த நிலையில் செக்ஸ் என்றாலே பயம் உண்டாகும்.

5. Dyspareunia

ஆணுறுப்பு, பெண்உறுப் பினுள் நுழைந்தவுடன் உண்டாகும் தாங்க முடியாத வலி. இது இருபாலருக்கும் உண்டாகிறது.

6. Sexual Addiction (
செக்ஸ் அடிமைநிலை) :

குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது. இந்த குறைபாட்டினால் தான் கலாச்சார சீரழிவுகளை நாம் சந்திக்கிறோம்.

7. Sex arousan disorder (
செக்ஸ் கிளர்ச்சி உணர்வு குறைபாடு) :

பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும் இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையில் Satyriasis (சேட்டிரியாஸிஸ்) என்று மருத்துவ உலகில் கூறுகிறார்கள். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : "Nymphomania" (நிம்போ மேனியா) என்று கூறுகிறார்கள். இந்த குறைபாட்டினால் தான் இன்று HIV தலை விரித்தாடுகிறது நம் நாட்டில். இது தவிர, சிலருக்கு (Congenital) பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும் testes இல்லாமலும் இருக்கும் உ.ம்.
Turner's Syndrome
இந்த குறைபாடுகளை சரி செய்வது மிக கடினம்.

பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் :

பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகள் செக்ஸில் (மருத்துவ வியாபாரத்தில்) பெரிதுபடுத்தப்படவில்லை.

பொதுவாகஆணுக்கும் பெண்ணுக்கும் மேலே விளக்கம் கூறியதில் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Secual addiction, Sex arousam disorder, Dysparennia இருபாலருக்கும் பொதுவானதே, இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறங்களில் Inhibite Sexual Orgasm 90% நகர்ப்புறங்களில் Sex arousal disorder மற்றும் Sexual addiction 90% உள்ளதாக 2007 ஆம் ஆண்டு மனரீதியான செக்ஸ் குறித்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 2007 ம் ஆண்டு முடிந்த "Divorce" கோர்ட்டு தீர்ப்புகளில் 95 % செக்ஸ் பிரச்சனையை காரணம் காட்டிதான் Divorce வழங்கப்பட்டுள்ளது.

ஹோமியோபதியில் செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு :

இன்று மருத்துவ அழகுசாதனப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தான் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. செக்ஸ் பிரச்சனை என்றாலே மாற்று மருத்துவம் தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆங்கில மருந்துகளினால் உடனடி நிவாரணம் கிடைக்க பெற்று பின்னர் பக்க விளைவுகள் உயிரே போய்விடும் நிலை ஏற்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவ துறையில் எந்த செக்ஸ் பிரச்சனைகள் இருந்தாலும் நிரந்தரமாக, பக்கவிளைவற்ற வகையில் குணபடுத்தப்படும் ஹோமியோபதியில் முதலில் நம்மிடம் வரும் நோயாளியின் பிரச்சினையை நன்றாக புரிந்து கொண்டு, மனஆறுதல் மற்றும் செக்ஸ் நெறிமுறைகளை (இயற்கையின்) தெளிவாக அறிவுறுத்த வேண்டும். பின்னர் கண்டறிந்த செக்ஸ் பிரச்சனைக்கு தகுந்த ஹோமியோபதி மருந்தை நோயாளியின் மனநிலைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்து கொடுத்தால் நிரந்தர குணம் உண்டாக்கலாம். ஹோமியோபதியை பொறுத்தவரை சில மருந்துகள் ஆண்களிடத்தும் சில மருந்துகள் பெண் களிடத்தும் நன்றாக வேலை செய்யும்.

Read more...

About This Blog

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க இதோ சில டிப்ஸ்!





எற்கனவே தம்பத்தியத்தின் பல டிப்ஸ் தந்துள்ளேன்.. இதோ மேலும் ஒரு டிப்ஸ்..



மானதாகும்.கணவன்,மனைவிக்குள் சின்ன சின்ன சந்தோஷங்கள் இருந்தாலே வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.



திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!



அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ.........



கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.



அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.



இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.



அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!



எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக` பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர்.



அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.



1. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்` அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.

2. கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்` அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.



3. ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.



4. மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.



5. இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.



6. மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.



- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.



இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.



சரி.சரி.கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பிங்கப்பா....




நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: j.k.vaalu24.malliga@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP